நாம் யாராக இருந்தாலும், இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்யக்கூடிய முக்கியமான கருவியாக பணம் தானே இருக்கிறது?
பணம் இருந்தால் தானே நல்ல நீரும், உணவும், நல்ல வீடும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கும்? பணம் இருந்தால் தானே நல்ல கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? பணம் இருந்தால் தானே, எங்காவது பயணம் செல்ல முடியும்? பணம் இருந்தால் தானே, தேவையானவற்றை வாங்கவும், ஆசைப்படுவதை செய்யவும் முடியும்? பணம் இருந்தால் தானே நமக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்?
பணம் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பதால், நாம் அனைவரும் நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கான வழியாக பணத்தை பார்க்கிறோம். ஆனால், பணம் இல்லையென்றால், இங்கு எதுவுமே கிடைக்காது என்ற பார்வையில், பணம் என்பது நம்மை கட்டுப்படுத்தக்கூடிய கருவியாகவும் இருக்கிறது என்பதை ஏன் நம்மில் ஒருவர் கூட பார்ப்பதில்லை?
காரணம் என்னவாக இருந்தாலும், பணம் தானே இந்த உலகத்தில் அனைத்தையும் முடிவு செய்கிறது?
அனைத்தையும் முடிவு செய்யக்கூடிய அதிகாரம் படைத்த எதுவும் சரியாகவும் நியாயமாகவும் இருந்தால் மட்டும் தானே நல்லதாக இருக்க முடியும்? அதுவே, மோசமானதாகவும் தீமையானதாகவும் இருந்தால், அனைவருக்குமான மிகப்பெரிய ஆபத்தாக தானே இருக்கும்?
அப்படியெனில், பணம் நியாயமானதா அநியாயமானதா என்று நமக்கு தெரியுமா? இல்லை, நம்மில் யாராவது சிந்தித்து இருக்கிறோமா? எப்போதாவது கேள்வி எழுப்பி இருக்கிறோமா?
நம்மிடம் இருந்த பொருட்களை கொடுத்து நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் பண்டமாற்று முறை தான் பயன்பாட்டில் இருந்தது; ஆனால், அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை தவிர பணத்தை பற்றி நமக்கு வேறென்ன தெரியும்?
பணத்தை அச்சடிக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? அரசாங்கம் தான் பணத்தையும் வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறதா? இல்லை, பணம் தான் அரசியலையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறதா? பணம் எங்கிருந்து வருகிறது?
அரசாங்கம் தான் பணத்தை அச்சடிக்கிறது என்றால், உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் ஒவ்வொரு வருடமும் ஏன் உலக வங்கியில் கடன் வாங்குகிறது? உலக வங்கி என்பது என்ன? உலக வங்கிக்கு அவ்வளவு பணம் ஏது?
எப்போதும் கடனாளிகளாகவே இருக்கும் அத்தனை நாடுகளும் ஏன் வாங்கிய கடன்களை ஒரு போதும் அடைப்பதே இல்லை? கடன் வாங்கும் நாடுகளால் எப்போதாவது தங்கள் கடன்களை அடைக்க முடியுமா? முடியாது என்றால், எதற்காக மறுபடியும் தொடர்ச்சியாக உலக வங்கி கடன் கொடுத்துக்கொண்டே இருக்கிறது?

நாம் தான் நமது பணத்தை வங்கிகளில் சேமிக்கிறோமா? இல்லை, வங்கிகள் தான் நமக்கு பணத்தை தருகிறார்களா? முதன்முதலாக பணம் யாரிடம் இருந்து எப்படி வந்தது? அனைவருக்கும் எப்படி பரவியது?
நாம் வங்கிகளில் சேமிக்கும் பணத்தை தான், வங்கிகள் மற்றவர்களுக்கு கடனாக தருகிறதா? வங்கிகள், கடன் கொடுத்தவர்களிடம் வசூலிக்கும் வட்டிகளை தான் சேமிப்பவர்களுக்கு வட்டிகளாக தருகிறதா?
அப்படியெனில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை திரும்பி வசூலிக்க முடியாமல் இருக்கும் வங்கிகளால், தங்கள் வாடிக்கையாளர்களின் சேமிப்புகளை திருப்பி கொடுக்க முடியாத நிலை வந்துவிடுமா? அப்படியான நிலை வந்தால் என்ன நடக்கும்?
இதில் வங்கிகளின் வருமானம் எங்கிருந்து வருகிறது? வங்கிகள் எப்படி நாட்டின் அதிகப்படியான வருமானத்தை சம்பாரிக்கும் நிறுவனங்களாக எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது?
தொடர்ச்சியாக ஏன் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது? தேவையும் உற்பத்தியும் மட்டும் தான் விலை உயர்வை தீர்மானிக்கிறதா? பண வீக்கம் என்றால் என்ன? பணமதிப்பிழப்பு என்றால் என்ன?
இந்த கேள்விகளை படிக்கும் போதே, இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்ய போகிறோம், இதனால் நமக்கு என்ன பயன் என்று தானே, நாம் அனைவரும் யோசிக்கிறோம்?
எப்படி நாம் அனைவருமே ஒரே மாதிரியாக சிந்திக்கிறோம்? இவை எல்லாம் முக்கியமில்லை, நமக்கு தேவையும் இல்லை என நாம் சிந்திப்பது தற்செயலாக நடக்கிறதா? இல்லை, நமக்கு தெரியாமலே, நமக்குள் இந்த சிந்தனைகள் திட்டமிடப்பட்டு திணிக்கப்படுகிறதா?
கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு நமக்கு பதில்கள் தெரியாது தானே? தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் கூட, இவை அனைத்தும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளாலும் குழப்பமான முடிச்சுகளாலும் கடினமான கணக்குகளாலும் தானே உருவாக்கப்பட்டுள்ளது?
ஆக, நாம் யாரும் பணம் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தானே, நம்மிடம் இருந்து அத்தனை உண்மைகளும் மறைக்கப்படுகிறது? பணத்தை பற்றி நாம் யாரும் எப்போதும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக தானே, பணம் இல்லையென்றால், இங்கு ஏதும் கிடைக்காது, எதையும் செய்ய முடியாது என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்?
அப்படி என்றால், நம் வாழ்க்கையின் அனைத்தையும் முடிவு செய்யக்கூடிய பணத்தை பற்றிய எவ்வித அடிப்படைகளையும் நம் யாருக்கும் தெரியப்படுத்தாமல், பணம் சம்பாரிப்பதையும், செலவிடுவதையும், பணம் இல்லையென்றால் கடன் வாங்கியாவது செலவிடுவதையும், வாங்கிய கடன்களை அடைப்பதையும் மட்டுமே நமது வாழ்க்கையாக மாற்றியதற்கு பின் மிகப்பெரிய சூழ்ச்சியும் சதியும் இருக்கிறது என்று தானே அர்த்தம்?
பணத்தைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வதற்கும், பணத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளை புரிந்துகொள்வதற்கும் வட்டத்தில் இணைந்திருப்போம்.
மின்னஞ்சல் மூலமாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் வட்டத்தில் இணைந்திருங்கள். வட்டத்தின் பதிவுகளை உங்களது நண்பர்களிடம் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லுங்கள். மாற்றத்தை நோக்கி இணைந்து பயணிப்போம். விழிப்படையவும் ஒன்றிணையவும், மாற்றத்தை ஏற்படுத்தவும், வட்டம்.
பணத்தைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வதற்கும், பணத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளை புரிந்துகொள்வதற்கும் ஆர்வமாக உள்ளது. தொடரவும். நன்றி!