“பணம் வழங்குவதால் மட்டும் தான் வட்டத்திற்குப் பங்களிக்க முடியும் என்று நினைக்க வேண்டாம். உங்களது நேரத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம், சமூகம் பற்றிய உங்களது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளலாம், உங்களது உறவுகளிடம் எங்களையும் எங்கள் கருத்துக்களையும் அறிமுகம் செய்யலாம், உங்களது திறமைகளால் எங்களுக்கு உதவலாம், அல்லது எங்களை அன்போடு வாழ்த்தலாம்.”
உங்களுக்காகச் சிந்திக்கலாம்
வட்டத்தின் கட்டுரைகளை அனைத்தையும் தொடர்ச்சியாகப் படிப்பதின் மூலமாக உங்கள் நம்பிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்குங்கள். சுயமாகச் சிந்தித்து, எங்களது கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அது தான், வட்டத்துடன் இணைந்த பயணத்தில் உங்களுடைய முதல் படியாக இருக்கும்.
வட்டத்தின் புதிய படைப்புகளையும் சமீபத்திய கட்டுரைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வட்டத்தில் இணையவும்.
எங்களது படைப்புகளைப் பகிரலாம்
உங்கள் சமூக ஊடகங்களில் எங்களது கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அதிகமான மக்களிடம் எங்களுடைய சிந்தனைகள் சென்றடைய நீங்கள் உதவலாம்.
சமூக ஊடகங்களில் எங்களுடன் இணைய Facebook, Instagram, Twitter, Pinterest மற்றும் Telegram.
கருத்து பரிமாற்றங்களில் கலந்து கொள்ளலாம்
எங்களது கண்ணோட்டம் பற்றிய உங்களது பார்வைகளை அந்தந்த கட்டுரைகளின் கீழ் நீங்கள் தெரிவிக்கலாம். எங்களது பார்வையில் நீங்கள் உடன்படலாம் அல்லது வேறுபடலாம். ஆனால், உங்களுடைய பார்வைக்கான காரணத்தை விளக்கமாக வெளிப்படுத்துங்கள். அப்போது தான், நமது கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் குறித்த ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்த முடியும்.
ஆக்கப்பூர்வமான முறையில் நமது கருத்துக்களை விவாதிக்க, கருத்து பரிமாற்ற நெறிமுறைகளைப் பின்பற்றவும்.
உரையாடல்களைத் தொடங்கலாம்
வட்டத்தின் சிந்தனைகளை உங்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய உரையாடல்களைத் தொடர்ச்சியாகத் தொடங்குங்கள்.
அவரவர் வாழ்க்கையில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டி, நமது சமூகச் சூழலின் உண்மைகளை உணரச் செய்யுங்கள்.
உங்கள் படைப்புகளை அனுப்பலாம்
மக்களைச் சிந்திக்க வைக்கும், மக்களின் நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் படைப்புகளை வட்டம் எப்போதும் வரவேற்கும். வட்டம் எதற்காக தொடங்கப்பட்டது, என்ன செய்து கொண்டிருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எங்களுடைய கண்ணோட்டத்தில் எங்களுடைய மொழியில் பொருந்தக்கூடிய படைப்பாக உங்களது படைப்பு இருக்கிறதா? உங்களது எழுத்து தனிமனித மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய படைப்பாக இருக்கிறதா?
அப்படியான கட்டுரைகளையும் படைப்புகளையும், படைப்புகளைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் எப்போதும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எங்களுடன் இணைந்து செயல்படலாம்
உலகத்தை மாற்றும் ஆற்றல் எழுத்தாளர்களிடம் மட்டுமே இல்லை. கலைகள் அனைத்தாலும், கலைஞர்கள் அனைவராலும் உலகத்தை மாற்ற முடியும்; மாற்ற வேண்டும்.
எங்களது எண்ணங்களை கட்டுரையாக்குவது, வெவ்வேறு மொழிகளில் எங்களது படைப்புகளை மொழிபெயர்ப்பது, கட்டுரைகளுக்கான ஓவியங்கள் வரைவது, மக்களை ஈர்க்கக்கூடிய புகைப்படங்கள் வடிவமைப்பது, காணொளி காட்சிகளை இயக்குவது போன்ற நிறைய வழிகளில் நீங்கள் வட்டத்தின் செயல்பாடுகளில் இணைந்து கொள்ள முடியும்.
தன்னார்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வட்டத்தில் இணைந்து கொள்ளலாம். உங்களை வரவேற்க வட்டம் காத்திருக்கிறது.
மாற்றமாக மாறலாம்
சிந்தனைகள் மட்டுமே உலகத்தை மாற்றிவிடாது. சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கக்கூடிய மனிதர்களால் தான் மாற்றம் தொடங்கும்.
ஆம், வட்டத்தின் சிந்தனைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, உங்களது கண்ணோட்டத்தையும் உங்களது வாழ்க்கையையும் மாற்றியமைப்பது தான் உங்களுக்கும் வட்டத்திற்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.
நமது சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான வாழும் உதாரணங்களாக நாமே மாறலாம். நமக்கான மாற்றமாக, நாமே மாறலாம். மாற்றத்திற்கான பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.