வட்டம், தங்களை அன்புடன் வரவேற்கிறது.
வட்டம், உலகத்தை மாற்றக்கூடிய கேள்விகளை எழுப்புகிறது.
நாம் எதை நம்புகிறோம், எப்படிச் சிந்திக்கிறோம் என்பதை மாற்றினால் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மாற்ற முடியும் என்று வட்டம் நம்புகிறது.
நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மாற்றினால், நமது உலகத்தை நம்மால் மாற்ற முடியும் என்று வட்டம் உறுதியாக நம்புகிறது.

தனி மனிதர்களாகவும், ஒட்டுமொத்த சமூகமாகவும் நமக்குத் தேவையான கேள்விகளை எழுப்பி, நம்மை நமக்காகச் சிந்திக்க வைப்பதற்கான புதியதொரு கண்ணோட்டத்தை வட்டம் அறிமுகப்படுத்துகிறது.
நமது சமூகக் கட்டமைப்புகளின் செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான படைப்புகளை உருவாக்கவும் வெளியிடவும் வட்டம் செயல்படுகிறது.
புதியதொரு உலகத்தைப் படைக்கக்கூடிய உரையாடல்களை வட்டம் தொடங்குகிறது.
நாம் பங்கெடுக்கும் உரையாடல்கள் தான் நமக்கான புதியதொரு உலகத்தை உருவாக்க உதவும் என்று வட்டம் நம்புகிறது.
ஆக்கப்பூர்வமான உரையாடல்களை ஒருங்கிணைக்க முடிந்தால், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றமாக நாமே மாறி, நமக்கான புதிய உலகத்தை நாமே படைக்க முடியும் என்று வட்டம் உறுதியாக நம்புகிறது.

தொடர்ச்சியான உரையாடல்களை ஒருங்கிணைத்து, மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டி, நமக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தற்சார்பு & கூட்டுறவு வாழ்வியலுக்காக நம்மை தயார்ப்படுத்தவும் வட்டம் செயல்படுகிறது.
நமது மனதில் இருந்து, நமக்கு எதிராகச் செயல்படும் சிந்தனைகளை அகற்றுவதற்கும், நமக்கான புதியதொரு உலகத்தைப் படைப்பதற்கு உதவக்கூடிய சிந்தனைகளை விதைப்பதற்கும், அதற்குத் தேவையான படைப்புகளை உருவாக்கவும் வெளியிடவும் வட்டம் செயல்படுகிறது.
நாம் சிந்தனைகளில் மாற்றத்தைத் தொடங்கி,
நமது வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி,
அதன் மூலமாக உலகத்தை மாற்றுவோம்.
வாருங்கள். நாம் ஒன்றிணைந்து, உலகத்தை மாற்றுவோம்.
