இன்றைய மருத்துவத் துறை நம்முடைய நலன்களுக்காக இயங்கிக் கொண்டிருந்தால், நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் தானே? இன்றைய மருத்துவ முறை நமக்கானதாக இருந்தால், சிறந்த மருத்துவ முறையாக இருந்தால், நமது ஆரோக்கியம் முன்னேறி இருக்க வேண்டும் தானே? நமது உடல்நலம் மேம்பட்டு இருக்க வேண்டும் தானே?
ஆனால், நம்முடைய உடல்நலமும் ஆரோக்கியமும் தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டிருக்கும் போது, உடல்நல கோளாறுகளும், நோய்களும், நோய்களால் ஏற்படும் மரணங்களும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, இன்றைய மருத்துவ முறை மக்களாகிய நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
ஒவ்வொரு தலைமுறையும் தனது முந்தைய தலைமுறையை விட பலவீனமடைந்து கொண்டிருக்கும் போது, கடந்த தலைமுறையை விட அதிக நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இன்றைய மருத்துவ முறை நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
மருத்துவமனைகளின் தேவையே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, மருத்துவமனைகளும் மருந்து மாத்திரைகளும் இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்து, ஊர் தோறும் மருத்துவமனைகளைத் திறந்து, அவற்றின் தொடர் வாடிக்கையாளர்களாக, நோயாளிகளாக மாற்றி இருக்கின்ற இன்றைய மருத்துவ முறை நம்முடைய நலன்களுக்காகவா இயங்கிக் கொண்டிருக்கிறது?
ஏதோ ஒரு தொந்தரவிற்காக மருத்துவமனைக்கு வரக்கூடியவர்களின் துயரத்தினை குணப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ வழி செய்ய வேண்டிய மருத்துவம், அவர்களைக் குணப்படுத்துவதாகச் சொல்லி, மருத்துவமனைகளையும் மருந்துகளையும் மட்டுமே நம்பி வாழ வைத்து கொண்டிருக்கும் போது, இன்றைய மருத்துவமுறை நமக்கானதாக இருக்க முடியுமா?
நமக்கு நோய்கள் வராமல் தடுப்பதும், அதையும் மீறித் தாக்கும் நோய்களிலிருந்து நம்மைக் குணப்படுத்துவதும் தானே மருத்துவத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்? அப்படி என்றால், நோய்களுக்கான உண்மையான காரணங்களையும், நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான எளிமையான வழிமுறைகளையும் நம்மிடம் இருந்து மறைத்துக்கொண்டிருக்கும் மருத்துவ முறை எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
மருத்துவர்களிடம் சென்றால் நம்முடைய நோய்கள் குணமாகிறது, நம்முடைய அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தான் மருத்துவமனைகள் செயல்படுகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்றைய மருத்துவ முறை உண்மையிலேயே நமது நோய்களைக் குணப்படுத்துவதை நோக்கமாக நினைத்தால், ஆரோக்கியமானதொரு உலகத்தை உருவாக்க முடியாதா?
அப்படியொரு ஆரோக்கியமான உலகத்தை இன்றைய மருத்துவ முறையால் உருவாக்க முடியும் என்றால், ஏன் இன்னும் உருவாக்கவில்லை? நோய்கள் இல்லா உலகத்தை உருவாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நம்முடைய நோய்களின் எண்ணிக்கையைக் குறைந்துள்ளதா? நாம் அனைவரும் எப்போதும் நோய்களோடு இருப்பதைத் தானே இன்றைய மருத்துவமுறை உறுதிப்படுத்துகிறது?
அப்படி என்றால், எந்த நோய்களையுமே முறையாக முழுமையாகக் குணப்படுத்தாத மருத்துவ முறை, நோய்களின் தாக்கத்தை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்கின்ற மருத்துவ முறை எப்படி நவீன மருத்துவ முறையாகவும் சிறந்த மருத்துவ முறையாகவும் இருக்க முடியும்?
நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை தங்களின் வாழ்க்கை முறையாகவும், மருத்துவத்தை தங்களுடைய உணவு முறையாகவும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, நமது வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் மாற்றி, மருத்துவமனைகளின் பின்னால் அலைய வைத்துக்கொண்டிருக்கிற இன்றைய மருத்துவ முறை எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?

பல தலைமுறைகளாக நம்மிடம் இருந்த நமது உடலமைப்பு, உடல் இயக்கம், உடலின் தேவை பற்றிய ஆழமான புரிதலை மறக்கடிக்கச் செய்து, நமது உடல் எப்படி இயங்குகிறது, நமது உடலுக்கு எது தேவை என்று மருத்துவர்களின் கண்ணோட்டங்களை நமக்குள் திணித்துக் கொண்டிருக்கும் இன்றைய மருத்துவ முறை நமக்கானதாக இல்லை என்று தானே அர்த்தம்?
நம்மைச் சுற்றி இயல்பாக வளர்ந்த தாவரங்களையும் சமையலறை பொருட்களையும் பயன்படுத்தி நமது உடல்நல பிரச்சனைகளை எளிமையாக குணப்படுத்திக் கொண்டிருந்த நம்மை எவ்வளவு செலவு செய்தாலும் நோயாளிகளாகவே வாழ வைத்துக் கொண்டிருக்கிற இன்றைய மருத்துவ முறை யாருடைய நலன்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது?
மருத்துவத்திற்கு பணம் வாங்கக் கூடாது என்று பண்பட்டிருந்த சமூகத்தை, பணம் இருந்தால் தான் நல்ல மருத்துவம் கிடைக்கும், நிறைய பணம் வாங்கக்கூடிய மருத்துவர் தான் நல்ல மருத்துவர் என்று நம்மை நம்ப வைத்துள்ள இன்றைய மருத்துவ முறை நம்முடைய நோய்களைக் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலா செயல்பட்டு கொண்டிருக்கிறது?
நாம் மருத்துவமனைக்குச் செல்வதற்கு நம்முடைய உணவு தானே முக்கிய காரணமாக இருக்கிறது? மருத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு நம்முடைய உணவில் இருக்கும் நஞ்சுகள் தானே துணை புரிந்து கொண்டிருக்கிறது? நம்முடைய உணவை மாற்றுவதின் மூலமாகவே நம்முடைய பெரும்பான்மை நோய்களைத் தவித்துவிட முடியும் என்பதை ஏன் மருத்துவ துறை நம்மிடம் தெரிவிப்பதில்லை?
இந்த மருத்துவ முறை தான் அறிவியல் பூர்வமான நவீன மருத்துவ முறை என்றும் மற்ற மருத்துவங்கள் அனைத்தும் ஆதாரமற்ற மருத்துவம் என்றும் நமது கல்வி முறை தானே நம்மை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது? மாற்று மருத்துவத்தின் கூறுகளையும், அடிப்படை தத்துவங்களையும், அதன் அறிவியலையும், ஏன் நமது பள்ளிக்கூட பாடங்கள் பேசுவதில்லை?
மருத்துவர்கள் என்றாலே ஆங்கில மருத்துவர்களையும், மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவத்தையும் தானே நம்முடைய ஊடகங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது? ஊடகங்கள் எதற்காக ஆங்கில மருத்துவத்தை உயர்த்தி பிடித்துக்கொண்டிருக்கிறது? ஊடகங்கள் எதற்காக மாற்று மருத்துவத்தின் அறிவியலையும் வெற்றிக் கதைகளையும் நம்மிடம் இருந்து மறைத்து கொண்டிருக்கிறது? ஊடகங்கள் அனைத்தும் மருத்துவத்தின் பின்னால் உள்ள வியாபார நோக்கத்தையும் மறைமுக அரசியலையும் எதற்காக நம்மிடம் இருந்து மறைத்துக் கொண்டிருக்கிறது?
காலம் காலமாக நம்மிடம் இருந்த மருத்துவ அறிவையும், பல்வேறு மருத்துவ முறைகளையும் புறக்கணித்து இப்படிப்பட்ட ஆங்கில மருத்துவத்திற்கு எதற்காக அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கட்டாயமாக்க வேண்டும்? இந்த மருத்துவம் தான் நம்முடைய பெரும்பாலான பெரிய நோய்களுக்கான முக்கிய காரணம் என்பதை அரசாங்கம் ஏன் நம்மிடம் மறைத்துக் கொண்டிருக்கிறது?
ஆக, இத்தனை அமைப்புகளும் சேர்ந்து நம்முடைய மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி இருக்கும் போது, ஒட்டுமொத்த அமைப்பும் இன்றைய மருத்துவம் மிகப்பெரிய வியாபார சந்தையாக இருக்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டிருக்கும் போது, மருத்துவம் என்ற பெயரில் இங்கு நடக்கும் எதுவும் நமது உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவோ, நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காகவோ, நமது நோய்களை குணப்படுத்துவதற்காகவோ இயங்கவில்லை, இனியும் இயங்காது என்று தானே அர்த்தம்?
தொடர்ந்து கேள்விகள் கேட்போம், உரையாடுவோம், உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். வட்டத்தோடு இணைந்திருங்கள்.
இந்தப் படைப்பில் உண்மை இருக்கிறது, இந்த உண்மை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.